கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கஸ்தூரி (வயது 29).செல்வக்குமார் இறந்துவிட்டதால் கஸ்தூரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த 30 கிராம் தங்கசெயினை பறித்து சென்று விட்டார். அதன் மதிப்பு ரூ.75ஆயிரம் இருக்கும். இது குறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி(பொறுப்பு) விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகிறார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment