நகர் மன்றத்தில் காய்கறி வியாபாரியாக SDPI கவுன்சிலர் தர்ணா 

கடையநல்லூரில் பெண்கள் உயர்நிலை பள்ளி மற்றும் தினசரி சந்தை செல்லும் பாதை ஆகியவற்றில் ஆக்ரமிப்பு செய்து சிலர் கடைகள் அமைத்து இருப்பதோடு இரவு மற்றும் பகல் நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது இப்பகுதியில் அமைந்துள்ள VAO அலுவலகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பள்ளிகூடத்திற்கு செல்லும் மாணவிகளை சிலர் கொச்சையாக பேசி கிண்டல் செய்து வருகின்றனர்.

 மேற்படி பிரச்சனையை சரி செய்ய வேண்டியும் ஆக்ரமிப்பு கடைகளை சீரமைக்க கோரியும் SDPI கவுன்சிலர் நைனா முஹம்மது (எ) கனி 20/04/2015 அன்று நடை பெற்ற கடையநல்லூர் நகர் மன்ற கூட்டத்தில் காய்கறி கடை விரித்து வியாபாரம் செய்து கண்டனம் தெரிவித்தார் இதனால் நகர்மன்றம் மிகவும் பரபரப்பு அடைந்தது மேற்படி பிரச்னை குறித்து ஏறத்தாழ 1 மணி நேரம் காரசார விவாதம் ஏற்பட்டது SDPI கவுன்சிலருக்கு ஆதரவு தெரிவித்து 10 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடு பட்டனர் தொடர்ந்து மன்ற தலைவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்ததை தொடர்ந்து பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.








உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment