கடையநல்லூர் சாதனா வித்யாலயா மாணவர்கள் குறுந்தகடுகளால் உலக வரைபடத்தை வரைந்து லிம்கா சாதனை நிகழ்ச்சி நடத்தினர். கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளியில் கடையநல்லூர் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எக்ஸ்னோரோ இணைந்து புவிதின விழா மற்றும் பள்ளி மாணவர்கள் குறுந்தகடுகளால உலக வரைப்படத்தை வரையும் லிம்கா சாதனை நடந்தது. 2000 சதுர அடி இடத்தில் 6000 குறுந்தகடுகளை கொண்டு 30 மாணவ, மாணவிகள் இணைந்து 10 நிமிடத்தில் உலக வரைபடத்தை வரைந்து காண்பித்தனர்.

விழாவில் நெல்லை மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் வில்சன் சத்தியராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மயில் கண்ணு ரமேஷ், தாளாளர் ரமேஷ் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் ரோட்டரி சங்கத் தலைவர் தங்கத்துரை, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், கடையநல்லூர் வனத்துறை அலுவலர் பாலேந்திரன் ருக்குமணி கல்வியியல் கல்லூரி முதல்வர் முதல்வர் பழனிச்சாமி, ரோட்டரி சங்க செயலாளர் உதுமான் மைதீன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கிய ரூபாவதி ஆகியோர் பேசினர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment