அஸ்ஸலாமு அலைக்கும்.

​மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளுக்கு,​

தேனி மாவட்டம், தேவாரம் என்ற ஊரில் “ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா (பதிவு செய்யப்பட்ட அறக்கடளை.)” இயங்குவதாகவும், அதை “இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண்” நடத்துவதாகவும் சுமார் 50 பெண்கள் அங்கு தங்கி படிப்பதாகவும் “அவர்கள் சாப்பிட உணவு இருந்தால் சாப்பிடுவார்களாம், இல்லாவிட்டால் அல்லாஹ் தருவான் என மறுநாள் நோம்பு வைத்துக்கொள்வார்களாம் என்று கேள்விப்பட்டு படைத்த அல்லாஹ்வின் மேல் இவ்வளவு நம்பிக்கையா” என ஆச்சரியம் அடைந்தேன்.

அந்தப்பகுதியிலிருக்கும் நண்பர் ஒருவர், நீண்ட நாட்களாக அழைத்துக்கொண்டிருந்ததாலும், அவரையும் அந்த ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானாவையும் பார்த்துவிட்டு வரலாமே என்று போயிருந்தேன்.

நான்கேள்விப்பட்டது அவ்வளவும் உண்மை. அவர்களின் நிலைமை, இருப்பிடம் ஆகியவற்றை பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.


அடுத்தடுத்த சிறிய 3 பழைய வாடகை கட்டிடங்களில் தங்கி இருக்கிறார்கள். சுற்றிலும் சாக்கடை ஓடுகிறது.

சமையலறை மிகவும் சிறிய இடம். அதில் சமைத்து எடுத்து போய் பறிமாறனும்.

நான் அங்கிருக்கம்போதே 7 வயதுக்குட்பட்ட 3 பெண்பிள்ளைகள் காய்ச்சல், சளி என்று டாக்டரிடம்போய்விட்டு கைகளில் மருந்து மாத்திரைகளுடன் வந்ததை பார்த்தேன்.

அந்த “ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானாவை” நடத்துவது 27 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண்.

சகோதரி ரெஜினா ஃபாத்திமா ஆலிமா அவர்கள். திருமணம் செய்துகொள்ளவில்லை. வயது சுமார் 50க்கு மேல். எத்தீம் பெண்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரிடமும்போய் கை ஏந்தவில்லை. கமிஷன் பெற்றுக்கொண்டு வசூல் செய்து கொடுக்கும் ஏஜென்டுகளும் இவர்களுக்கு இல்லை. (சிலர் ஏமாற்றி விட்டார்கள்) .

அல்லாஹுத்தஆலா யார் யார் மனதில் இவர்களைப்பற்றி போட வேண்டுமோ, அவர்கள் மனதில் போட்டு போய்ப்பார்க்கத்தூண்டுகிறான்.
அங்கு போய்ப்பார்க்கும்போது “என்னம்மாவேண்டும்” என்று கேட்டால் மட்டுமே, தேவைகளைப்பற்றி சொல்கிறார்கள்.
சகோதரி ரெஜினா ஃபாத்திமாவின் முக்கிய நோக்கம்

இன்ஷா அல்லாஹ் பெண் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக
அவர்களை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும்
“.

57 மாணவ மாணவிகள் உள்ளனர்.

1. M.Com. முடித்துவிட்டு, அல்லாஹ் உதவியால் Journalism ஒரு பெண் படித்துக்கொண்டு இருக்கிறார்.

2. M.Sc., IInd year அல்லாஹ் உதவியால் ஒரு பெண் படித்துக்கொண்டு இருக்கிறார்.

3. B.Sc., IT அங்கு வேலை செய்யு பெண்ணின் மகன் உத்தமபாளையத்தில் அல்லாஹ் உதவியால் படிக்கிறார்.

4. B.E. Engineering அல்லாஹ் உதவியால் ஒரு பையன் செங்கல்பட்டில் படிக்கிறார்.

5. B.A. English Literature முடித்துவிட்டு, இன்ஷா அல்லாஹ் M.A. English Literature ஒரு பெண்அல்லாஹ் உதவியால் படித்துக்கொண்டு இருக்கிறார்.

6. B.Sc. Microbiology முடித்துவிட்டு, அல்லாஹ் உதவியால் Nursing ஒரு பெண் படித்துக்கொண்டு இருக்கிறார்.
(இந்த பெண்ணிற்கு தொழுகை இபாதத் உள்ள படித்த மாப்பிள்ளை தேவை – விபரங்களக்கு தொடர்பு கொள்ளவும்).


7. +2 முடித்துவிட்டு அல்லாஹ் உதவியால் Nursing மூன்று பெண்கள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
8. கீழக்கரையில் பாலிடெக்னிக்கில் இரண்டாவது வருடம் ஒரு பையன் அல்லாஹ் உதவியால் படிக்கிறார்.

A. 4 பேர் +2 படிக்கிறார்கள்.

B. 10 வயதுக்கு உட்பட்ட 15 பெண் பிள்ளைகள் உள்ளார்கள்.

C. ஒன்றிலிருந்து 10ஆவதுக்குள் படிக்கும் பெண் பிள்ளைகள் 10 பேர் உள்ளார்கள்.

D. 10ஆம் வகுப்பிலிருந்து கல்லூரிவரை படிக்கும் பெண் பிள்ளைகள் 10 பேர் உள்ளார்கள்.E. சமீபத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்றும்,
(போட்டோவில் மொட்டை அடித்துள்ள) இரண்டரை வயது* , ஒன்பது வயது* பெண் குழந்தைகள் இரண்டும் வந்து சேர்ந்துள்ளதாக சொன்னார்கள்.
(இரண்டரை வயது*, ஒன்பது வயது* – இந்த இரண்டு பிள்ளைகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மிகவும் கொடுமை).

கல்லூரியில் படிக்கும் மானவர்கள் கல்லூரி ஹஸ்டலில் தங்கி படிக்கிறார்கள்.
சிறு வயது மானவர்கள் அங்கேயே வேறு கட்டிடத்தில் அறையில் அறையில் தங்கி படிக்கிறார்கள்.

அருளாலன் அல்லாஹ் உதவியால் 1744 ச அடி (“கடை” என்று குறிப்பிட்டுள்ள) நிலம் அவர்களிடம் உள்ளது. அதில் சகோதரி ரெஜினா
பாத்திமாவின் சகோதரர் ஒருவருக்கும் பங்கு உண்டு. அவர் இன்னும் இஸ்லாத்தை தழுவவில்லை. இன்ஷா அல்லாஹ் அவர் பங்கையும்
விலைக்கு வாங்கனும்.

முக்கியமாக முஸ்லீம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் அதிகம் செல்வதில்லை ஆதலால் அவர்கள் மேல் வெயில் படாததால்
வைட்டமி “D” குறைபாடு ஏற்பட்டு நோய்கள் உண்டாகின்றன.
தற்போது உள்ள அரசாங்க சட்டப்படி, அனாதை இல்லங்கள் விசாலாமாக இருப்பதுடன், வெயிலில் ஓடிவிளையாட இடமும் இருக்கனும்.
இன்ஷா அல்லாஹ் அந்த இடத்தில் தரை தளத்தில் மஸ்ஜித், பெண்கள் தொழும் இடம், சாப்பிடும் இடம், சமையலறை கட்டுவதுடன்,
முதல் மாடியில் சிறிய பிள்ளைகளும், இரண்டாவது மாடியில் பெரிய பிள்ளைகளும் தங்க கட்டிடம் கட்டுவதுடன், பிள்ளைகள்
காலை மாலை வெயிலில் ஓடி விளையாடவும், அன்றாட சொந்த தேவைக்கு காய்கறிகள் பயிரிட்டுக்கொள்ளவும் இடம் தேவை.

அதற்கு தற்போது உள்ள நிலம் போதாது.
இன்ஷா அல்லாஹ் சுற்றியுள்ள சில நிலங்களை வாங்கனும். அதற்கு உங்களின் அன்பளிப்புகளும் பங்களிப்புகளும் தேவை.

சென்ற 4.9.2014 அன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து வந்த ஒருவர், பெயர் “அல்லாஹ்வின் அடியான், உங்கள் நிலத்தில்
போர்வெல் போடப்போகிறோம்” என்று சொல்லி உள்ளார். எனக்கு காலை 6:20க்கு போன்வந்தது. “அல்ஹம்துலில்லாஹ்.
குழந்தைகளை அழைத்து கொண்டு போய் எல்லோரும் இரண்டு ரகஆத் தொழுது துஆச்செய்யுங்கள்” என்றேன்.

180 அடியில் அடியில் தண்ணீர் வந்தாலும் அதை நம்பி விட்டு விட வேண்டாம். 400 அடிக்கு மேல் போட்டால்தான் இன்ஷா
அல்லாஹ் எதிர்காலத்திற்கு சரியாக வரும்” என்று அருகிலிருந்த விவசாயிகள் சொன்னதி்னால், மேலும் தொடர்ந்து
போட்டுக்கொண்டிருந்தார்கள்.

200 அடியில் போர்வெல் போட்டுக்கொண்டிருக்கும்போது, பாறை தடுத்து கரும்புகை வந்துள்ளது. குழந்தைகள் தண்ணீர் வராதோ
என நினைத்து அழ ஆரம்பித்து விட்டார்களாம். மேலும் இரண்டு ரகஆத் தொழுதுவிட்டு அழுதுகொண்டே துஆச்செய்து கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வி்ன் அருளால் பாறையைக்குடைந்து 400 அடிக்கு மேல் போர்வெல் போட்டபின் தண்ணீர் வந்துள்ளது. மொத்தம் 565 அடிக்கு
போர்வெல் போட்டு பைப்பும் இறக்கி கொடுத்து விட்டுப்போய்விட்டார் பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர்.

அல்லாஹ்வின் அருளை என்னவென்று புகழ்வது? மாஷா அல்லாஹ் !
1. யார் அல்லாஹ்வுக்காக ஒரு மஸ்ஜித் கட்டுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்த்தில் ஒரு மாளிகை கட்டுகிறான்.

2. நமது நாயகம் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது வலதுகை சுட்டு விரலையும் நடு விரலையும்
இணைத்து காட்டி “யார் அனாதைகளை ஆதரிக்கிறார்களோ அவர்களும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம்”
என்று சொன்னார்கள்.


அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே, நீங்கள் எதை விரும்புகிறீர்கள் ? சுவர்க்த்தில் மாளிகையையா ?
ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன்
சுவர்க்த்தில் ஒன்றாக இருப்பதையா ?

வெளிநாட்டிலிருந்து நன்கொடை அனுப்புபவர்கள்:
NAME: S. RAJINA FATHIMA
ADDRESS: 22/11, WARD, NEAR JUMMA MASJID, THEVARAM 625530 THENI DISTRICT, TAMILNADU, INDIA.

PH: 04554 254427, Mobile: +91 9787522735 Email: rahmathpengalnalatvm@gmail.com
A/C NO. 6051827120 INDIAN BANK, THEVARAM BRANCH, TAMIL NADU, INDIA.
TO SEND BY NET TRANSFER: INDIAN BANK, MADURAI MAIN BRANCH, SWIFT CODE: IDIBINBBMDM
AND FORWARD TO: IFSC CODE: IDIB000T016 MICR CODE: 625019097 A/C NO. 6 0 5 1 8 2 7 1 2 0
என்ற தனிப்பட்ட வங்கி கணக்கிற்கும்,

(அல்லது உங்கள் வீட்டிற்கு அனுப்பி, கீழ் உள்ள கனராபேங்க் கணக்கிற்கு அனுப்ப சொல்லுங்கள். அதுதான் சிறந்தது.
80G சர்டிபிகேட் இன்னும் அவர்களுக்கு வரவில்லை
).

இந்தியாவிற்குள் எங்கிருந்தும் அனுப்ப விரும்புபவர்கள்:

RAHMATH PENGAL NALA ETHEEMKANA MATHARSA (TRUST)
CURRENT A/C No.1094201000224, IFSC Code: CNRB0001094 (Used for RTGS and NEFT transactions)
CANARA BANK – THEVARAM BRANCH
என்ற வங்கி கணக்கிற்கும் அனுப்பலாம்.




“எல்லா அனாதை இல்லங்களுக்கான உரிமம் கலக்டரி மனுசெய்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இல்லாதவர்கள் அனாதை
இல்லம் நடத்த முடியாது” என்று 2 மாதங்களுக்கு முன் தமிழ் நாடு அரசாங்கம் போட்ட உத்தரவுபடி, கலக்டரிடம் இவர்கள் மனு
செய்து இருந்தார்கள்.

அரசாங்க உத்தரவு http://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/2014/154-Ex-IV-I-E.pdf பக்கம் 61ல் பார்க்கவும்.

22.9.2014 அன்று மாலை இவர்களின் இடத்தை பரிசோதிக்க வந்திருந்த இஞ்சீனியர், அறைகளை அளந்து பார்த்துவிட்டு,

“15 குழந்தைகளுக்கு 20X20 அடியில் அறை இருக்கனும். உங்களிடம் 57 பேர் இருக்கிறார்கள் என்றால், இதுபோல் 4
அறைகள் வேண்டும். இவற்றை ஒருவருடத்திற்குள் கட்டிமுடித்தால் உரிமம் கிடைக்கும், இல்லாவிட்டால் இல்லை.

கட்டுவதற்குமுன் கட்டிட பிளானை எங்களிடம் காட்டி அனுமதி வாங்கிக்கொள்ளனும்” என்று சொல்லிப்போய்விட்டார்.
இருக்கூடிய இவ்வளவு சிறிய நிலத்தில் மேற்குறிபிட்டபடி எப்படி மஸ்ஜிதும் கட்டிடமும் சுற்றுப்புறமும் அமைக்கப்போகிறோம்

என்ற கவலையுடனும், அப்படி கட்டாவிட்டால், பிள்ளைகளை அரசாங்க அல்லது மாற்று மத, அனாதை இல்லங்களுக்கு
அழைத்துப்போய் விடுவார்களோ என்றும் பயந்து கொண்டிருக்கிறார்கள். பயத்திற்கு காரணம்:

பிள்ளைகள் அரசாங்க, மாற்று மத அநாதை இல்லங்களுக்கு சென்றுவிட்டால், அங்கு தொழுகை, நோம்பு, குர்ஆன் வகுப்புகள்

கிடையாது.


( 1. காணாமல் போய் அரசாங்க அனாதை இல்லத்தில் இருந்த ஒரு முஸ்லிம் சிறுவன், பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்போது,
நெற்றியில் விபூதி விடப்படிருந்ததை தொலைக்காட்சி செய்தியில் நான் பார்த்திருக்கிறேன்

2. பத்திரிக்கை செய்தி: ஆந்திராவிலிருந்து காணாமல் போன ஆறு விரல் உடைய ஒரு முஸ்லிம் சிறுவன், பல வருடங்களுக்குப்பின்
சென்னயில் “சபரிமலை” போக மாலை போட்டுக்கொண்டு இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டான் - கொடுமை:சபரிமலைக்கு
போய்வந்தபின்தான் குடும்பத்துடன் இணைவேன் என்று அவன் சொன்னது).


அல்லாஹ் உதவியால் சகோதரி ரெஜினா பாத்திமா அவர்களின் கவலையையும் பயத்தையும் நீக்குவது நமது கடமையும்
பொறுப்பும் ஆகும்.


அருளாளன் அல்லாஹ் தன் திருமறையில்,

அவர்களுடைய செல்வத்தில் யாசிப்போருக்கும், வசதியற்றோருக்கும் (நாணம் காரணமாக கேட்காமல் இருப்போருக்கும்)
உரிமையுண்டு
(அல்-குர்ஆன் 51:19)

என கூறுகிறான். ‘உரிமை உண்டு’ என்று கூறுவதன் மூலம் எவர் ஒருவர் தான தர்மம் செய்ய வில்லையோ அவர்
அல்லாஹ்விடத்தில் குற்றவாளி என அறிய முடிகிறது. நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் மூலம்
நம்முடைய செல்வம் குறைந்து விடுகிறது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அல்லாஹ் தன் திருமறையில்,
நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான் (அல்-குர்ஆன் 34:39)

நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத்
திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
(அல்குர்ஆன்: 2:272)தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம்.
அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன.
 

தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்;

அறிந்தவன் என்று கூறுகிறான்
. (அல்குர்ஆன் 2:261).
என்றும் கூறுகிறான். கொடுத்தால் குறையாது, கொடுக்காமல் இருந்தால் நிறையாது! ’ஸதகா என்ற தர்மம்.

ஆதலால் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே, உங்களின் பங்களிப்புகளையும் உங்கள் உறவினர்கள்,
முஸ்லிம் நண்பர்கள் பங்களிப்புகளையும் வாங்கி சகோதரி ரெஜினா பாத்திமா ஆலிமா அவர்களுக்கு அனுப்பி
வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில்
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு.


(அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு.

அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.


தயவுசெய்து இதை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி, உதவி செய்யச்சொல்லுங்கள்.

கருணையாளன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வையும்,

குறைவற்ற செல்வத்தையும்
, நீண்ட ஆயுளையும் தந்து பறக்கத்தும் ரஹ்மத்தும் செய்வானாக.
அன்புடன்,

அல்ஹாஜ் M.A. முஹம்மது இர்பான் (61+), சென்னை. +919884769666 (வாட்ஸ்அப் & டெலிகிராம்).
gemsirfan@gmail.com

- சில பிள்ளைகள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் அவர்களையும் சேர்த்து போட்டோ எடுக்க முடியவில்லை.

- கடைசி படத்தில் அடர்த்தியான மஞ்சள் நிறமுள்ள “கடை” என்று குறிப்பிட்டுள்ள நிலம் இவர்களுடையதும்
இவர்களின் சகோதரருடையதும் ஆகும்.
2 Rahmath Orphan Girls Welfare Madrasa Trust 5 Rahmath Orphan Girls Welfare Madrasa Trust Government Order Punishment 2 Years Land of Rahmath Orphan Girls Welfare Madrasa Trust (2) TIN SHEETED ROOF AND UNPAVED WALLS. 1 Rahmath Orphan Girls Welfare Madrasa Trust


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment