இவன் பெயர் முத்து. கடையநல்லூர் பக்கம் துரைச்சாமிபுரம் தான் இவன் ஊர். தாய் கிடையாது. தகப்பன் கூலி வேலை பார்க்கும் 'குடிகாரன்'. 12 ஆம் வகுப்புத் தேர்வில் இவன் எடுத்த மதிப்பெண்கள், 1030. ஆனால், இன்று இவன் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து, குப்பைகளையும், கழிவுப் பொருட்களையும் பொறுக்கிக் கொண்டிருக்கிறான். காரணம், மேற்க்கொண்டு படிக்கவில்லை.
ஏன் படிக்கவில்லை என்று கேட்டதற்கு, ''நாங்கள் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜாதிச் சான்றிதழ் எனக்கு அரசு வழங்கவில்லை. இதனால் நான் உயர்கல்வி பயில முடியாமல் இருக்கிறேன். எனக்கு பண உதவி எதுவும் வேண்டாம். எனக்கு ஜாதிச் சான்றிதழ் ஒன்று கிடைத்தால் போதும். TNPSC தேர்வு எழுதிக் கொள்கிறேன். நானே மேற்கொண்டு படித்து, என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன்'' என்கிறான் நம்பிக்கையுடன்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment