சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி (வயது 29). பி.இ. பட்டதாரியான இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில் சுரண்டையில் இருந்து கடையநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் மீது மினி லாரி மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment