நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியாவது ஹெச்.ராஜா மீது வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாற்றின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் பத்திரிக்கைக்கு அளித்த கண்ணீர் பேட்டி:-
"பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தை குடும்ப நிறுவனமாக 1997 ஆம் ஆண்டு காரைக்குடியில் துவக்கினார் ஹெச்.ராஜா. அப்பொழுது நான் பா.ஜ.க.வின் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தேன். ராஜா, மாநில செயலாளராக இருந்த பரிச்சயத்தால், அவர் மேலுள்ள நம்பிக்கையால், அவர் கேட்டுக்கொண்டபடி, முதலில் ரூ.50000 மட்டும் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்'டில் முதலீடு செய்தேன். அதற்கு 2 வட்டி வீதம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தேன். அதற்குப் பிறகு ரூ.8 லட்சம் என பத்தரை லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.
திடுமென வட்டி வருவது நின்று விட, என்ன என்று கேட்டதற்கு, "நிறுவனத்தில் திருடு போய்விட்டது" என்றார். அதற்குப் பிறகு இன்றுவரை திருச்சியிலிருந்து, காரைக்குடிக்கு 200 தடவைக்கு மேல் வந்து சென்றுவிட்டேன். அவர் எனக்குப் பணத்தைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆளை வைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். என்னைப்போல் அந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அதிகம். பணத்தை இழந்த அத்தனைப் பேரும் எங்களது பா.ஜ. கட்சியினரே. கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை வாய் மூடி மௌனித்திருப்பதே" என்றார் பழனியப்பன்.
முன்னாள் தேசியக்குழு உறுப்பினரும், பழனியப்பனின் மனைவியுமான ரேவதி கூறுகையில்,
முதலில் ரூ.50000, அடுத்து ரூ.2 லட்சம் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது போதும் என்றிருந்தோம். அப்போது சின்னக்கடை வீதியில் எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று வங்கியில் போட்டு வைத்திருந்தோம். அதை தெரிந்துகொண்ட ஹெச்.ராஜா, "பேங்க்கில் சும்மாதானே பணம் கிடக்குது. இதை எங்ககிட்ட முதலீடு செஞ்சா, 2 வட்டி கிடைக்குமில்ல" என்றார். நாங்களும் அவர் பேச்சை நம்பி முதலீடு செய்து, நடுத்தெருவில் நிற்கிறோம். இப்ப, என் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடக்குது. அதற்காகக் கூட தந்துவிடலாமில்லையா? வரும் தை பொங்கலுக்குள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராவிட்டால் நான், என் கணவர், என் மகள் உட்பட மூன்று பேரும் ஹெச்.ராஜா வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்" என்றார் ரேவதி.
பாஜக-வின் தமிழக தலைவர்களில் இந்த ஹெச்.ராஜா என்பவர் ஒரு தினுசானவர். இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது ஆதரங்களைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாமல் துணிந்து பேசக்கூடியவர். மறுதரப்பினரை பேச அனுமதிக்காமல் குறுக்கே பேசியும், கத்தியும் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடியவர். குறிப்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றியோ, காங்கிரஸின் மீதான பொருளாதார குற்றச்சாற்றுகள், ஊழல்கள் பற்றி பேசும் போதோ கொந்தளிக்கக் கூடியவர்.
குறிப்பு:- "ப.சிதம்பரத்தைக் காப்பாற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை மறைக்க முயலவில்லை. சிதம்பரம், மன்மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாற்றுகள் அல்லது சந்தேகங்கள் அனைத்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுவே நம் நிலைபாடு!"
இன்னொரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும்...

இவர் பொதுக்கூட்டங்களிலோ, ஆர்பாட்டங்களிலோ பேசும்போது, எதிர்கட்சியினரை, எதிர் கருத்து கொண்டவர்களை, குறிப்பாக பிற மதத்தினரை மிக இழிவாக தரக்குறைவாக பேசக்கூடியவர்.
தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு புனிதரைப் போல, ஆசைகளைத் துறந்த ஒரு அப்பழுக்கற்றவர் போல பேசும் ஹெச்.ராஜா மீது சொந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களே நிதி மோசடி குற்றச்சாற்றை வைத்துள்ளனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாற்றியுள்ளனர். அதுவும் அவர்கள் கேட்பது, தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இவர் மீது நடவடிக்கையை எல்லாம் கோரவில்லை.
நாம் தமிழக அரசிடம் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இவர் எதிர் கருத்து கொண்டோரையும், பிற மதத்தினரையும் இழிவாக பேசும் போதெல்லாம் ஒரு சிறு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. ஒரு அறிக்கை மூலம் கூட கண்டிக்கவில்லை. இதுவே ஈழத்தமிழர் ஆதரவுக் கருத்துக்கள் பேசியவர்கள் மீதும், பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர்கள் மீதும் தடைகளை விதித்தும், மீறுபவர்கள் மீது வழக்குகள் போட்டு சிறை தண்டனைகளையும் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இவர் சுதந்திரமாக பேசிக் கொண்டிருக்கின்றார்.
ஒரு இந்துத்துவ இயக்கத்தைச் சார்ந்தவர் கூட பேச தயங்குகிற, பேச முடியாத நச்சுக் கருத்துக்களை பேசுகின்ற இவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர் என்று சொன்னால், அதிர்ச்சியாக இருக்கின்றது. இதுவரை நடந்தவைகள் ஒருபுறம் இருந்தாலும் தற்போது இவர் மீது வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாற்றின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Posted by
Rahmath
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment