திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே முன் விரோதத்தில் உருட்டு கட்டையால் தாக்கி முதியவரை கொன்ற வழக்கில் இளைஞருக்கு வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை அடுத்த சிங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் சங்கையா (70). விவசாயி. இதே பகுதியை சேர்ந்த கோட்டைசாமி மகன் முத்துபாண்டி என்ற முத்துக்காளை (34). இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 23.05.2012 அன்று சங்கையா அங்குள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த முத்துபாண்டிக்கும் சங்கையாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். 
இந்த தகராறில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி, அங்கிருந்த உருட்டு கட்டையால் சங்கையாவை தாக்கி விட்டு தப்பி விட்டார். பலத்த காயமடைந்த சங்கையா இறந்தார். சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதி்நது முத்துபாண்டி என்ற முத்துக்காளையை கைது செய்தனர்.
வழக்கினை விசாரித்த திருநெல்வேலி 3 ஆவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி என். முத்துகிருஷ்ணன், வெள்ளிக்கிழமை குற்றவாளி முத்துபாண்டி என்ற முத்துக்காளைக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக எம்.எஸ். துரைமுத்துராஜ் ஆஜரானார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment