பாபரி மஸ்ஜித் - இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்
இந்தியாவின் வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 22 வருடங்களாகிறது. “மீண்டும்
அதே இடத்தில் பாபர்
மஸ்ஜித் கட்டி தருவோம்” என்ற மத்திய அரசின் வாக்குறுதி நடைமுறைப் படுத்தப் படாமலே
இருக்கிறது. பாபரி மஸ்ஜித் –தை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரவேண்டும். மேலும்
மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிசன் வழங்கிய அறிக்கையின் படி பாபரி
மஸ்ஜித் –தை இடித்த 68 குற்றவாளிகளை தேச விரோத சட்டத்தில் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தியும் டிசம்பர் 6 அன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, நெல்லை
மேற்கு மாவட்டம் சார்பாக கடையநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும்
நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர்
ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் D.செய்யது இப்ராஹிம்
உஸ்மானி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளார் M. மஹபூப் அன்ஸாரி ஃபைஜி
மற்றும் எஸ்.டி.பி.ஐ – கட்சியின் மாவட்டத் தலைவர் J. ஜாபர்
அலி உஸ்மானி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட்–ன் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுஃப் M.A.B.L, எஸ்.டி.பி.ஐ –
கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் M.நிஜாம் முஹைதீன் B.Com மற்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளார் பா.துரையரசு, ஆகியோர் இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், பொதுமக்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு
செய்தனர். இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நகர தலைவர் N.K.M.காதிர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment