கடையநல்லூரில் இருந்து வெளிநாடுகளில் வேலை செய்வோர் பற்றி கடையநல்லூரில் உள்ள சிலரது எண்ணம் என்ன என்பதை உணரும் போது,பாலைவனத்தின் கஷ்டத்தை விட அதிக மன வேதனை தான் ஏற்படுகிறது. · …

‪#‎முன்போர்‬ காலத்தில் இல்லாமையினால் வளைகுடா நாடுகளை நோக்கி வேலைசெய்து பொருளீட்ட உடபிறவிகளை பிரிந்து சொல்லில் அடங்கா பற்பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருச முளுவதும் வாங்கிவந்த கடனை அடைந்து , எண்ணிச் சுட்ட பணியாறம் பேணித்தின்னு மருமவளேனு சொல்லிர்கிணங்க வறுமையின் ஆழத்தில் வாழ்ந்த எம்பெற்றோர்கள் சிக்கனத்தில் செலவுகள் செய்து செமித்ததிலிருந்து நெசவுத்தொழிலால் பட்ட கடனை நித்தமும் அடைத்து , அதிலும் மீதமானதை தம்பிதங்கையின் கல்யாண சேமிப்பு கந்தூரி நல்லநாள் திங்கனாளென பற்பல செலவுகளை அதிலிருந்து செய்துவந்தார்கள் ,


கடையநல்லூர் கைத்தறியில் கால்வயிறும் அரைவயிறுமாய் காலரா நோயோடு காலம் தள்ளிய அப்போதிருந்த எம் உறவுகளுக்கு வளைகுடா இன்னல்களும் இடையூறுகளும் கஸ்டங்களும் நஸ்டங்களும் பிரிவின் துயரங்களும் ஊரை நினைக்கையில் இதுவெல்லாம் ஒன்றுமேயில்லை, அப்படி ஒவ்வொருவரும் ஓய்வின்றி ஆணவத்திற்கும் அகம்பாவத்திற்கும் அழிச்சாட்டியத்திற்கும் அனாவசியத்துக்கும் ஆடம்பரத்திற்கும் இடம் கொடாமல் சம்பாதித்து தன்னை வளப்படுத்தியதோடு நல்லூரையும் கூரையில்லா ஊராகவும் எக்குறையும் சொல்லா ஊராகவும் இல்லாமை என்பது ஏரக்குறைய இல்லாமையான பிறகு ஏனிந்த வளைகுடா பயணம் ?, வளத்தை மேலும் வலுப்படுத்தவா ? இல்லை வந்த இடத்திற்கே மீண்டும் திரும்பிவிடுவோம் என்ற பயமா ???,

Haider Ali 


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment