ஏக இறைவனின் திருப்பெயரால்..
சூனியம் சம்மந்தமாக என்னுடைய நிலைபாடு

அண்பார்ந்த கொள்கைச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

சூனியம் சம்மந்தமாக உங்களின் நிலைபாடு என்ன என்று பல சகோதரர்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கேட்டு வருகிறார்கள்.

சூனியம் விஷயத்தில் என்னுடைய நிலைபாடு தவ்ஹீதீன் ஜமாத்தின் நிலைபாடுக்கு மாற்றமானதாகும்.

காரணம் குர்ஆனையும், புகாரி முஸ்­மில் பதிவு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் புறக்கணித்துவிட்டு சூனியம் சம்மந்தமாக தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும் குர்ஆன் ஹதீஸை சிறந்த முறையில் விளங்கிய நபித்தோழர்கள், தாபிஈன்கள், தபவு தாபி.ன்கள் அவ்வழியில் வந்த நல்லறிஞர்கள் தற்கா­க அறிஞர்களான ஷைக் ஸா­ஹ் பின் உஸைமீன், ஷைக் பின்பாஸ், ஷைக் அல்பானி அவர்களின் கருத்தையும் தூக்கி எரிந்துவிட்டு தவ்ஹித் ஜமாத்தின் கருத்தை என்னால். ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான் இங்கு நபித்தோழர்கள் மற்ற அறிஞர்கள் அனைவரையும் குறிப்பிட காரணம் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் என்னுடைய உம்மத்தில் சத்தியத்தின் மீது ஓரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்­யுள்ளார்கள். முஸ்­ம் 225 பாடம் ஈமான்.

சூனியம் இருக்கிறது என்று சொன்னால் அது ஷிர்க்காகும் என்பது தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு. நான் குறிப்பிட்ட எல்லா அறிஞர்களும் சூனியம் இருக்கிறது என்று சொன்னவர்களே சூனியம் இருக்கிறது என்று சொன்ன அறிஞர்கள் ஷிர்க்கில் இருக்கின்ற அறிஞர்கள் நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி எப்படி சத்தியத்தில் இருக்க முடியும்? அவர்கள் ஷிர்க்கில் இருப்பதை 14 நூற்றாண்டுகளாக அல்லாஹ் பார்த்து கொண்டிருந்தானா?

14 நூற்றாண்டுகளாக சூனியத்தை ஷிர்க் என்று எந்த நபித்தோழர்களுக்கும் விளங்கவில்லையா? சூனியத்தை விளங்கப்படுத்திய அறிஞர்களுக்கும் சூனியம் ஷிர்க் என்று விளங்கவில்லையா? சூனியம் ஷிர்க் என்று எங்களுக்கு மட்டும்தான் விளங்கியது என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அது மட்டுமல்ல சூனியத்தை மையமாக வைத்து புகாரி, முஸ்­மில் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் நிராகரிப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மேற் சொன்ன கருத்து சூனியம் சம்மந்தமாக ஏன் இந்த நிலைபாட்டை எடுத்தேன் என்பதற்கான காரணமாகும். சூனியம் இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி அறிஞர்கள் மவ்லவி முஜாஹித், இஸ்மாயில் ஸலபீ, அன்சார் தப்லீகி, முபாரக் மதனீ மற்றும் மற்ற அறிஞர்களும் நிறையவே பேசியுள்ளார்கள். மறுப்பு தெரிவித்துள்ளார்கள். சூனியம் இருக்கிறதா இல்லையா என்பதை இவர்களின் உரைகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment