கடையநல்லூர் அருகே உள்ளகீழ திருவேட்டநல்லூரை சேர்ந்தவர் பூவையா, சாலைபணியாளர். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து விட்டார். உயிருக்குபோராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூவையா இறந்தார். 

குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சொக்கம்பட்டி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment