மீரட்: பொதுமக்கள் மீது பா.ஜ.கவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டதில் ஒருவர் பலியானார். 60 பேர் காயமடைந்தனர்.
மீரட் நகரில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு தெருவில், பள்ளிவாசலுக்கு அருகில் தெருக்குழாய் அமைப்பதில் இரு தரப்பாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது..
அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில், 50 க்கும் மேற்பட்ட பாஜக வினர் திடீரென இடையில் புகுந்து, பள்ளிவாசலின் சுவற்றை இடித்து தள்ளினர். இதை தொடர்ந்து ஏற்பட்ட அடிதடி மற்றும் கல்வீச்சில் ஒருவர் பலியானார்.
இதை படம் பிடித்துக்கொண்டிருந்த 2 பத்திரிகை போட்டோ கிராபர்கள் உட்பட 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கலவரத் தீ பரவாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment