வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குருசாமி (வயது23). இவர் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை பகுதியில் தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். குருசாமி கடையநல்லூர் அருகே உள்ள அனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று குருசாமி கடையநல்லூர் – தென்காசி வழித்தடத்தில் உள்ள அனந்தபுரம் தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் காதல் தோல்வியால் குருசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment