தென்காசி தொகுதியில் ராஜபாளையம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி), கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. இங்கு கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான பெ. லிங்கம் காங்கிரஸ் வேட்பாளரான வெள்ளைப்பாண்டியை 34677 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தது. தற்போது அக்கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை. அ.தி.மு.கவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தே நிற்கின்றன. மறுபுறம் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரசும் தற்போது அக்கூட்டணியில் இல்லை. இங்கு தற்போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. அதன் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியே நேரடியாக போட்டியில் குதித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் இத்தொகுதியில் தனித்து போட்டியிடுகின்றது. இங்கு அக்கட்சிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. பா.ஜ கூட்டணியில் இத்தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான சதர்ன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளை பார்ப்போம்.

ராஜபாளையம் தொகுதியில் இ.கம்யூ.க்கு 49592 வாக்குகளும், காங்கிரசுக்கு 32118 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 11321, புதிய தமிழகத்திற்கு 19430 வாக்குகளும் கிடைத்துள்ளது.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் தொகுதியில் இ.கம்யூ.க்கு 51402 வாக்குகளும், காங்கிரசுக்கு 51402 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 12616 வாக்குகளும், புதிய தமிழகத்திற்கு 22548 வாக்குகளும் கிடைத்துள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியில் இ.கம்யூ.க்கு 46074 வாக்குகளும், காங்கிரசுக்கு 35267 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 12616 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 18871 வாக்குகளும் கிடைத்துள்ளது.

வாசுதேவநல்லூர் தொகுதியில் இ.கம்யூ.க்கு 42784 வாக்குகளும், காங்கிரசுக்கு 35734 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 11386 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 25145 வாக்குகளும் கிடைத்துள்ளது.

கடையநல்லூர் தொகுதியில் இ.கம்யூ.க்கு 43649 வாக்குகளும், காங்கிரசுக்கு 49926 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 13407 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 25145 வாக்குகளும் கிடைத்துள்ளது.

தென்காசி தொகுதியில் இ.கம்யூ.க்கு 47410 வாக்குகளும் காங்கிரசுக்கு 57069 வாக்குகளும், தே.மு.திக.வுக்கு 15644 வாக்குகளும், புதிய தமிழகத்திற்கு 13582 வாக்குகளும் கிடைத்துள்ளது.

ஒட்டு மொத்தமாக இ.கம்யூ.க்கு 281174 வாக்குகளும், காங்கிரசுக்கு 246497 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 75741 வாக்குகளும், புதிய தமிழகத்திற்கு 116685 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அதேபோல் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் செல்வாக்கை அறியும் மாவட்ட குழு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 312311 வாக்குகளும், தி.மு.கவுக்கு 191900 வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 92630 வாக்குகளும், ம.தி.மு.கவுக்கு 31203 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 18852 வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 89089 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 9460 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இந்த புள்ளி விவரங்களையும் பாராளுமன்ற தேர்தல் புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தற்போது கிடைக்கக்கூடிய வாக்கு சதவிகிதங்களை கணித்துள்ளோம். அதற்கான விவரம் படத்தில் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கு சதவிகித அட்டவணையில் தேமுதிக, மதிமுக கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட்டி வாக்கு சதவிகித விவரம் தரப்பட்டுள்ளது.

தி.மு.க.வில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமிக்கு எதிராக செயல்படுவதால் அ.தி.மு.கவுக்கு நிலைமை மேலும் சாதமாகியுள்ளது. அதன்படி அ.தி.மு.கவுக்கும் புதிய தமிழகத்திற்கும் இடையேயான போட்டியில் அ.தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment