காங்கிரசின் பலத்தை நிரூபிக்க இப்பொழுதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் பீட்டர்அல்போன்ஸ்.
கடையநல்லூர் பேரவைத் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை இரவு திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.அய்யாத்துரை தலைமையில் நடைபெற்றது. ஆலங்குளம் செல்வராஜ், காமராஜ், சிவராமகிருஷ்ணன், சட்டநாதன், இடைகால் மாரியப்பன், சண்முகவேலு, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கலந்து கொண்டு பீட்டர்அல்போன்ஸ் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தனித்தன்மைமையை நிரூபிக்க நல்ல வாயப்பு கிடைத்துள்ளது. தமிழக காங்கிரசுக்கு இது ஒரு புதிய பாதை. இந்தப் பாதையில் நன்கு பயணித்து தனித்துவம் மிகுந்த பாதையாக்குவதற்கு கட்சியினர் உழைக்க வேண்டும்.காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார். மத்திய அரசுதான் தமிழகத்தில் 75 சதவீத திட்டஙகளை செயல்படுத்தியுள்ளது. முதியோர் உதவித் தொகை, தேசிய ஊரக வேலை உறுத்திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவை மத்திய அரசின் திட்டங்களாகும். தமிழக அரசு இத்திட்டங்களைத் தங்களுடைய திட்டங்கள் என பொய்யாகப் பிரசாரம் செய்து வருகிறது.
மைனாரிட்டி அரசு என்று மாற்றுக் கட்சிகளால் அழைக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. அதை எல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள். 2016-ல் காங்கிரஸ் தீர்மானிக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றார் அவர்.
இதில் தென்காசி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் குலாம்,காளிராஜ், கமர்தீன், சுந்தரையா,மக்தும்,சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment