கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகிய தனி தாலுகா(வட்டாச்சியர்) அமைக்க கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் தீர்மானங்கள் மூலமாக, கடந்த தி மு க அரசிடமும், அதை தொடர்ந்து வந்துள்ள தற்போதைய அ.தி.மு.க அரசிடமும், கடையநல்லூர் தொகுதியின் உறுப்பினரும், அமைச்சருமாகிய செந்தூர் பாண்டியன் அவர்களிடமும் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் பொதுக்கூட்ட தீர்மானங்கள் மூலமாக வலியுறுத்தபட்டு வருகிறது.

தற்போது 11-08-14 அன்று சட்டமன்ற கூட்ட தொடரில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடையநல்லுரை தனி தாலுகாவாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை வரவேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக நன்றி அறிவிப்பு போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

12-10-2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட தீர்மானம்


தென்காசியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டமும் கடையநல்லூரை மையமாகக் கொண்டு தனி தாலுகாவும் அமைக்கப்படவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

http://kadayanallurtntj.blogspot.ae/2010/10/blog-post_5433.html
04-05-13 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட தீர்மானம்

3. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக மக்கட் தொகை கொண்ட கிராமப்புரங்களுடன் அதிக தொடர்புள்ள கடையநல்லூரை தனி தாலுகாவாக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகமுறை வலியுறுத்தியும் கடந்த கால அரசுகள் மெத்தனமாக விட்டு விட்டனர். இப்போதுள்ள அதிமுக அரசு இதைக்கவனத்தில் கொண்டு கடையநல்லூரை தனி தாலுகாவாக்க அறிவிக்கும் படி தமிழக அரசை இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

http://kadayanallurtntj.blogspot.ae/2013/05/4-5-13.html


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment