மன்மோகன் சிங் அரசு பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தது அதன் கடைசி கால கட்டங்களில் தன்னுடைய பெயரை கெடுத்துக்கொண்டது அதை விமர்சனம் செய்து தங்களை மீடியாக்கள் மூலம் முன்னிறுத்திக்கொண்ட மோடி வகையறாக்கள் தாங்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் தங்களால்தான் மக்களைக்காப்பாற்ற முடியும் என தனது 56 சைஸ் மார்பை விரித்துக்காட்டி வாய்ச்சவடாவால் விட்டவர் இப்போதைய பிரதமர்...
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி ஐ டி அம்பிக்கள் மோடியின் பரந்த(?) மார்பை மீடியாக்களில் படம் போட்டுக்காட்டாதகுறையாக பரப்பி ஆதரவு தேடி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி விட்டார்கள்...
ஆட்சிக்கு வந்து 1 மாதம் ஆன நிலையில் மன்மோகன் அரசு பத்து ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை ஒரே மாதத்தில் சாதித்துக்காட்டியுள்ளது பாராட்டத்தக்கது..
1.டீஸல் விலை உயர்வு..
2. ரயில்கட்டண உயர்வு..
3. சரக்குக்கட்டண உயர்வு..
4. சமையல் கேஸ் விலை மாதம் 10 உயர்வு..
5.அதானியின் மோசடி வழக்குகள் தள்ளுபடி...
6. குஜராத் முதல்வருக்கு 100 கோடியில் ஹெலிகாப்டர்..(மக்களுக்கு விலவாசி உயர்வு பரிசு)
7. இளம்பெண்ணை வேவு பார்த்த மோடியின் மீது அமைக்கப்பட்ட கமிஷன் கலைப்பு..
8. நான் தேசிய வாதி என மார் தட்டிக்கொண்ட மோடி தேசியத்தில் தயாரிக்கப்ப்ட்ட மஹேந்திரா கம்பெனி காரை தூக்கி எறிந்து விட்டு வெளி நாட்டுக்கரில் பவனி..
9. ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் பல பாகங்களிலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் விளைவித்தது..
10. டெல்லி பல்கலைக்கழகத்தின் 55 ஆயிரம் மாணவ்ர்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைத்ததனால் டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...
11. பதவியேற்பு விழாவுக்கு தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷேவை தமிழர்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் அவர்களின் மனங்களை ரணப்படுத்தி ரத்தினக்கம்பள வரவேற்பு கொடுத்து உபசரித்தது..
12. பாகிஸ்தான் அதிபரோடு மன்மோகன் பெச்சு வார்த்தை நடத்திய போது பாகிஸ்தான் இந்தியனின் கழுத்தை அறுக்கிறான் பிரதமர் பாகிஸ்தான் அதிபரோடு கோழி பிரியாணி சாப்பிடுகிறார் என ங்க்கலடித்து விட்டு.. தான் ஆட்சிக்கு வந்ததும் பாகிஸ்தான் அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து விருந்து கொடுத்து தான் நக்கலடித்த விஷயத்தை உண்மைப்படுத்தி இந்தியர்களின் மனதை ரணமாக்கியது
இப்படி பல சாதனைகளை புரிந்தும் மன் மோகன் சிங்கை ம்யூட் அதாவது வாய் திறக்காத மவ்னபிரதமர் என விமர்சித்த மோடி அவர்கள் இவ்வளவு சாதனைகள் செய்தும் மக்களின் வயிற்றெரிச்சலை இதுவரை வாய்திறக்காமல் தலை வணங்கி மவுனமாக ஏற்றுக்கொண்டதையும்...
இப்படி பல வகை மக்களுக்கும் குறுகிய காலத்தில் நிறைய வளர்ச்சி(?) அளித்த மோடி சர்க்கார் இன்னும் இது போல பல காரியங்களை செய்து மக்களின் இன்னும் அதிகமான வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொள்ள மனமாற வாழ்த்துகிறோம்...



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment