கடையநல்லூர்,
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்த தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து கடையநல்லூரில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்துக்கு நகர ஒருங்கிணைப்பாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
மதுரை– செங்கோட்டை பயணிகள் ரெயிலை கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் மறித்து போராட்டம் நடத்தினார்கள். கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட பேச்சாளர் கரும்புளி கண்ணன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் பசும்பொன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்பட 20 பேரை கைது செய்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment