கடையநல்லூர் நகரசபை பகுதியில் அம்மா உணவகம் அமைக்கப்படும் இடத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் பார்வையிட்டார். கடையநல்லூர் நகரசபை பகுதிகளான வாரச்சந்தை, அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம், நகரசபை ஆணையாளர் குடியிருப்பு ஆகிய இடங்களை பார்வையிட்டார். அவருடன் நகரசபை மண்டல நிர்வாக இயக்குனர் அஜ்மல்கான், தென்காசி தாசில்தார் கோட்டூர்சாமி, கடையநல்லூர் வருவாய்த்துறை அதிகாரி ஆறுமுகம், நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) ஜெயபால்மூர்த்தி, என்ஜினீயர் பிரின்ஸ் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கலெக்டர் ஆய்வில், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment