கடையநல்லூரில் சமீப காலமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்களுக்குத் தேவையான தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் என்பதால் இந்நிலை உருவாகியுள்ளது என்று நாம் நினைத்தாலும், சில நிர்வாக சீர்கேடுகளை சரி செய்தால் தற்போதைய தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்பதே உண்மை.
29-04-2014 தேதி அன்று கடையநல்லூரில் நீராதார நிலையங்களை மேற்பார்வையிட கடையநல்லூர் நகர்மன்ற தலைவரும் சுமார் 12 கவுன்சிலர்களும் சென்றிருந்தோம். அதில் நாங்கள் கண்ட குறைகளும், அதனை சரிசெய்யப்பட வேண்டிய தவறுகளும் இதோ......
1. கடையநல்லூருக்கு குடிநீர் வழங்கும் கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகளில் மூன்று மின் மோட்டார்கள் பழுதாகியுள்ளது. இந்தக் கோடையிலும் அது சரிசெய்யப் படவில்லை.
2. இரண்டு கிணறுகளில் மொத்தமாக சகதி அடைத்துள்ளது. இதுவரையிலும் தூர்வாரப் படாததே இதற்கு காரணம். இதனால் தண்ணீர் வேண்டிய அளவு இருந்தும் எடுக்க முடியவில்லை.
3. கல்லாற்றில் இருந்தும் வரும் தண்ணீர் குழாய் மற்றும் ஏர் பம்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் இன்று வரை சரிசெய்யப் படவில்லை.
4. மேற்கண்ட பிரச்சினை அரசு பொதுப்பணித்துறைக்குத் தெரிந்தும் 11 முறை நகராட்சியிலிருந்து புகார் மனுக்கள் அனுபப்பட்டும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை. எனவே, பொதுப்பணித்திறையின் இந்த அலட்சியப் போக்கை நகராட்சியின் கவுன்சிலர்கள் சார்பில் வன்மையாக்க் கண்டிக்கிறோம்.
இவண் :-
S. நயினா முஹம்மது (@) கனி
29 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர், (கடையநல்லூர்)
மாவட்ட பொருளாளர் SDPI கட்சி,
நெல்லை மேற்கு மாவட்டம்.







உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment