சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.25 மணிக்கு இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் சுவாதி என்ற 40 வயது பெண் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பெட்டிகளும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது ரயில் பெட்டி ஒன்றின் கழிவறையில் பதுங்கியிருந்த மர்ம நபரை போலீசார் பிடித்துள்ளனர்.



பிடிபட்ட நபருக்கும் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கிறதா? அந்த நபர் வசம் இருக்கும் மிகப் பெரிய பையில் இருப்பது என்ன? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment