சொக்கம்பட்டி அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஜமாத்துக்கு சொந்தமான கட்டிடம் மீது கல்வீசியது தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரத்தில் ஜமாத் சார்பில் முகைதீன் ஆண்ட வர் பள்ளிவாசல் பின்புறம் திருமண மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. மண்டபத்தின் முன்புறம் தற்காலிகமாக ஒரு தகர கேட் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் திரிகூடபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கடந்த 31ம்தேதி நடந்தது. ஊர்வலம் பள்ளிவாசல் பின்புறம் வழியாக செல்ல போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஊர்வலம் அந்த வழியாக வந்தபோது சிலர் பெரிய கல்லை திருமண மண்டபத்தின் கேட் மீது வீசியுள்ளனர். இதில் கேட் உடைந்தது. இதுகுறித்து ஜமாத் தலைவர் அப்துல் ஜப்பார் (54) சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment