சங்கரன்கோவிலில் கிழிந்த ரூபாய் நோட்டை டேப் போட்டு ஒட்டிய �அதிபுத்திசாலி� அதை 110 ரூபாய் நோட்டாக்கி விட்டார்.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. சாதாரண 10 ரூபாய்க்கு போய் வங்கிக்கு செல்வதா என அலுத்துக்கொண்டு பலரும் அதை ஒட்டி மாற்றி விடவே முயற்சிக்கின்றனர்.
சங்கரன்கோவிலில் இப்படி கிழிந்த நோட்டை ஒட்டிய ஒருவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. கிழந்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகளை சேர்த்து ஒன்றாக ஒட்டி விட்டார். அவசரத்தில் ஒட்டும்போது மத்தியில் உள்ள 10 ரூபாய் என்ற எண் 110 என ஆகிவிட்டது. ஒட்டிய பிறகு தான் செய்த தவறு அவருக்கு தெரிந்திருக்க கூடும்.
ஆயினும், அசராமல் கூட்டம் அதிகம் இருந்த ஒரு கடையில் அந்த நோட்டை கொடுத்து ஏதோ ஒரு பொருளை வாங்கி சென்றுவிட்டார். இரவு கடையை அடைக்கும்போது, கடை முதலாளி ரூபாய் நோட்டுகளை எண்ணியபோது தான், 110 ரூபாய் அவர் கண்ணில் பட்டது. எத்தனையோ கிழிந்த நோட்டுகளை பார்த்துள்ளோம். இப்படி ஒரு நோட்டை தவறுதலாக ஒட்டிக்கொடுத்து நம்மை ஏமாற்றி விட்டார்களே என்று அவர் நொந்து கொண்டதுதான் மிச்சம்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment