சாப்பிடுவதற்காக தனது நண்பரின் வீட்டுக்குப் போன நபர் அங்கு நண்பரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் ஓடிப் போய் விட்டார்.

நடிகை நமீதாவின் ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த நபரை போலீஸார் கைது செய்து விட்டனர்.

சூரத்தின் சர்தானா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரத் படேல். இவர் ஒரு வைரம் பாலிஷ் போடும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மகேந்திர கச்சாடியா என்பவரும் வேலை பார்த்தார்.

கச்சாடியா வேறு ஊரைச் சேர்ந்தவர். சூரத்தில் அவருக்கு யாரையும் தெரியாது. தனியாக தங்கியிருந்தார். அவருக்கு அந்த ஊர் சாப்பாடு ஒத்துவரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வந்தார்.

இதைப் பார்த்த படேல், உனக்கு சரியான சாப்பிடும் இடம் கிடைக்கும் வரை பேசாமல் எனது வீட்டில் சாப்பிட்டுக்கோ என்று கூறியுள்ளார். இதையடுத்து தினசரி மதியம், படேல் வீட்டுக்கு சாப்பிட வந்தார் கச்சாடியா.

அப்போது படேலின் மனவி பினிதாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி கள்ள உறவுக்குள் கொண்டு போய் விட்டது. நீ பேசாமல் என்னுடனேயே வந்து விடு, நாம் எங்காவது போய் விடலாம் என்று கூறியுள்ளார் கச்சாடியா. இதை ஏற்றார் பினிதா.

இதையடுத்து தனது கணவர், இரு குழந்தைகளை விட்டு விட்டு கச்சாடியவுடன் ராஜ்கோட்டுக்குப் போய் விட்டார். ஆனால் அங்கு போய் சில வாரங்களிலேயே கச்சாடியாவுடன் அவருக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தனது கணவரிடமே திரும்பி வந்தார்.

இதையடுத்து படேல் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரின் பேரில் கச்சாடியாவைக் கைது செய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment