கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரியதெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41), தக்காளி வியாபாரியான இவர் கடையநல்லூர்நகர தி.மு.க. மாணவரணி அமைப்பாளராகவும் இருந்தார்.

நேற்று அவர் வியாபாரம் நிமித்தமாக சேர்ந்தமரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மாவடிக்கால் அருகே குறுகிய சாலையில் சென்ற போது எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. அதற்கு வழிவிடுவதற்காக மகேந்திரன் திடீரென பிரேக் பிடித்தார்.
அப்போது மகேந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மகேந்திரன் இறந்தார்.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காளீஸ் வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மகேந்திரனுக்கு ரமா (34) என்ற மனைவியும், ராஜேஷ்(13) என்ற மகனும், சுபா (12) என்ற மகளும் உள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment