kadayanallur municipality
கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினராக கோமதிபாண்டியனும் (அதிமுக), ஒன்றியக்குழு உறுப்பினராக திருமலைகுமாரும் (அதிமுக) போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 19ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கடையநல்லூர் நகராட்சி 24 ஆவது வார்டிற்கான இடைத்தேர்தலில் போட்டியிட கோமதிபாண்டியன் (அதிமுக), மாடசாமி (அதிமுக மாற்று), ராமையா(சுயே) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் மாடசாமி, ராமையா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனர். இதையடுத்து கோமதிபாண்டியன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் ஜெயபால்மூர்த்தி வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாவட்ட அதிமுக துணைச் செயலர் வி.பி.மூர்த்தி, கடையநல்லூர் தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன், நகரச் செயலர் கிட்டுராஜா, மாவட்ட மாணவரணி துணைச் செயலர் யாத்ராபழனி, அதிமுக நிர்வாகிகள் ஐவர்குலராஜா, முத்துகிருஷ்ணன் உதவித் தேர்தல் அலுவலர் ஜின்னா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
19 ஆவது வார்டில் மும்முனைப் போட்டி: கடையநல்லூர் 19 ஆவது வார்டு இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
19ஆவது வார்டில் சேக்உதுமான் (அதிமுக), உதுமான்மைதீன்(அதிமுக மாற்று), அப்துல்மஜித் (முஸ்லிம் லீக்), சேகுதுமான்(முஸ்லிம் லீக் மாற்று), முகமதுஹாலித் (எஸ்டிபிஐ) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில், உதுமான்மைதீன், சேகுதுமான் ஆகிய 2 மாற்று வேட்பாளர்களும் தங்களது மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, சேக்உதுமான் (இரட்டை இலை), அப்துல்மஜித்(ஏணி), முகமதுஹாலித் (வைரம்) ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒன்றியக்குழு உறுப்பினர் போட்டியின்றித் தேர்வு: கடையநல்லூர் ஒன்றியக்குழு உறுப்பினர் (6ஆவது வார்டு-காசிதர்மம்) பதவிக்கான தேர்தலில் திருமலைகுமார் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் கதிரேசன் அறிவித்தார். பின்னர் அதற்கான சான்றிதழையும் அவர் வழங்கினார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment