கடையநல்லூர், : கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட உரக்கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் மூச்சுதிணறலால் பாதிக்கப்படுகின்றனர்.

கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாகும். இங்கு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் இங்கு தினம்தோறும் பல மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகி வரு கிறது.

குப்பைகளை பிரித்து அவற்றில் இருந்து உரம் தயாரிக்க கடையநல்லூரை அடுத்து போகநல்லூர் பகு தியில் திடகழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரகிடங்கு சுமார் 1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. இங்கு பிளாஸ்டிக் குப்பைகளை பிரிப்பது, குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிப்பது உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அத்துடன் குப்பைகளை பிரிக்க சுமார் ரூ.10 லட்சம் செலவில் இயந்திரமும் வாங்கப்பட்டது. இயந்திரத்தை நிறுவ ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், ரூ.5 லட்சம் மதிப்பீட் டில் குடிநீர் வசதி, ரூ.5 லட் சம் மதிப்பீட்டில் இணைப்பு சாலை உட்பட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட் டது. ஆனால் இங்கு குப்பை களை பிரிக்கவோ, மண்புழு உரம் தயாரிக் கவோ எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

மாறாக பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து சுற்றுசூழலை பாழாக்கி வருவ தாக இப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த உரகிடங்கில் பிளாஸ் டிக் குப்பைகள் உட்பட அனைத்து குப்பைகளும் இரவும், பகலும் தொடர்ந்து எரிந்து வருவதால் இப்பகுதியில் செயல் பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் மூச்சுதிணறல் உட்பட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் அருகிலுள்ள சுந்தரேசபுரம் உள்ளிட்ட அருகிலுள்ள கிராம பகுதி மக்களும் புகையால் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதை சுவாசிக்கும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக் குமோ என இப்பகுதி மக் கள் அச்சத்தில் உள்ளனர்.

இங்கு குப்பைகள் எரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல் வேறு போராட்டம் நடத்தி யும் பிளாஸ்டிக் குப்பைகள் எரிவதை தடுக்க நகராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற் றம் சாட்டுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி உரக்கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகள் எரி வதை தடுக்கவும், குப்பை களை பிரிக்கும் இயந்திரம் செயல்படவும், இப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்க ளுக்கு இடையூறு இல்லா மல் உரக்கிடங்கு இயங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் இப்பகுதி மக் கள் வலியுறுத்தியுள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment