இன்று கூகிளில் தெரிவது 19 ஆவது நூற்றாண்டின் ரஷ்யாவைச் சேர்ந்த தத்துவவியலாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் அரசியல் நிபுணர் என்ற பன்முகத் தன்மை கொண்ட அறிஞரான லியோ டால்ஸ்டாய் ஆவார்.

இவரது நாவல்கள் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட மிகச் சிறந்த புனைவுகளாக அமைந்துள்ளதுடன் காலத்தால் அழியாத உலகப் புகழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் மிகச் சிறந்த இரு நாவல்களாக யுத்தமும் சமாதானமும் (War and Peace) மற்றும் அன்னா கரெனனினா (Anna Karenina) ஆகியவை திகழ்கின்றன. இந்நூல்கள் 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய வாழ்க்கையை பிரதிபலிக்கும் யதார்த்த வாத புனைகதைகளின் உயர்நிலையைச் சித்தரிக்கின்றன. லியோ டால்ஸ்டாய் மத்திய ரஷ்யாவின் யஸ்யானா போல்யானாவில் ரஷ்யாவின் பண்டைய பிரபுத்துவ குடும்பத்தின் உயர்குடியில் பிறந்தவர் ஆவார். புத்தரின் ஞான போதனைகளைத் தனது கதைகளிலும் வலியுறுத்தியிருந்த டால்ஸ்டாய் அஹிம்சையைப் பின்பற்றியதால் இவர் ஓர் ஒப்பற்ற நூலாசிரியர்களில் ஒருவர் என காந்தியடிகளும் வர்ணித்துள்ளார்.

இவரது பிரசித்தமான மேற்கோள்கள் கீழே:

1.சந்தோஷமான தருணங்களை பிடித்து கொள், காதலி,காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை,மற்றவை எல்லாம் மாயை.நாம் ஆர்வம்கொள்ளும் ஒரே விஷயம் இது தான்.
2.காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
3.நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும் தேம்பிக்கலங்குதலும், முட்டி மோதிக்கொள்ளுதலும், இழப்புக்குள்ளாதலும், தொடங்குதலும் தூக்கியெறிதலும், மீண்டும் தொடங்குதலும் மீண்டும் தூக்கியெறிதலும் தவிர்க்க இயலாதவை. நிம்மதி ஆன்மாவின் இழிநிலை.
4.எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னைப் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை.

1828 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி பிறந்த இவர் தனது 82 ஆவது வயதில் 1910 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி காலாமாகி இருந்தார். இன்று அவரது 186 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment