சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தற்போது சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சிங்கப்பூர் பயணிகள்
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து 3 விமானங்கள் வந்தன.அதிரடி சோதனை
இந்த விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து சுங்க இலாகாவினரும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.27 பயணிகளிடம் தீவிர சோதனை
இந்த விமானங்களில் வந்த பயணிகளில் சந்தேகத்திற்கு இடமான 27 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.150 கிராம் தங்கம் சிக்கியது
அப்போது 10 பேரிடம் கடத்தல் தங்கம் இருந்தது தெரிய வந்தது. மொத்தமாக 150 கிராம் தங்கம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.அதிரடி அபராதம்
இதையடுத்து 10 பேருக்கும் தலா ரூ. 45 லட்சம் என்று மொத்தமாக ரூ. நாலரை கோடி அபராதம் விதிக்கப்பட்டது.Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment