பவானி அருகே பல பெண்களுடன் தகாத உறவு கொண்டதுடன் சொதைக் கேட்டுத் தகராறு செய்துவந்த மகனை ஆள் வைத்துக் கொலை செய்த தந்தை, குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.
பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டை, ஊஞ்சப்பாளையத்தைத் சேர்ந்தவர் 61 வயதுடைய சதாசிவம். இவர், அதிமுக பூதப்பாடி ஊராட்சி செயலராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது மகன் 34 வயதுடைய பிரபு. இவர் கடந்த 7 ஆம் தேதி மர்மமான முறையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், தனது மகன் பிரபுவை சொத்துத் தகராறில் ஆள் வைத்துக் கொலை செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமாரிடம் சதாசிவம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
இதையடுத்து, அம்மாபேட்டை காவல்துறையினர் வேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தனது மகன் பிரபு திருமணம் செய்து கொள்ளாமல், பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுத்தினார்.
மேலும் சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்டுத் தகராறு செய்ததார் இதனால், பாலு என்கிற பாலசுப்பிரமணியம் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து தன் மகன் பிரபுவைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பவானி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதாசிவம், பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
Thanks : Tamil Web
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment