துபாய்: துபாய் தமிழர் சங்கமம் 08.08.2014 அன்று மாலை 6.30 மணியளவில் தெய்ரா துபாய் ஈடிஏ ஸ்டார் ஹவுஸுக்கு பின்புறம் உள்ள ட்யூடிஏஎஸ் தமிழ் பேச்சலர் அறைகள் திறப்பு விழா துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனர் திரு. எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் திரு பாளை அப்துல் கரீம், கலை இலக்கிய பிரிவு செயலாளர் அதிரை திரு கவியன்பன் கலாம், தொழிற் பிரிவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் திரு.முஸ்தபா நூரணி, ஐ.டி. பிரிவு தலைவர் திரு. ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

வில்லா நுழைவு வாயிலை துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனரின் திருமதி. ராமாமிர்தத்தம்மாள் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார்.

டாக்டர் சுமதி முருகேசன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

அறை "அ" வை நத்தம் திரு சாதிக் அவர்களும்,

அறை "ஆ" வை காயல்பட்டினம் மௌலான மௌலவி திரு.சுலைமான் ஈடிஏ, மூன் டிவி ஆலிம் அவர்களும்

அறை "இ " வை சாகுல் ஹமீது (துபாய் ஹெல்த் ஆதாரிட்டி) அவர்களும்

அறை "ஈ " வை நெல்லை ஜிந்தா அவர்களும்

அறை "உ " வை திரு கவியன்பன் கலாம் அவர்களும்

அறை "ஊ " வை திரு பாளை அப்துல் கறீம் அவர்களும் திறந்து வைத்தனர்

வில்லாவை பிடித்து கொடுத்த திரு சாதிக் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும், மிகசிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் டியூடிஏஎஸ் தொழிற்பிரிவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் திரு.முஸ்தபா நூரணி அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும் அன்பளிப்பாக அளித்து கௌரவிக்கப்பட்டது.

டியூடிஏஎஸ் நிறுவனர் தமது தலைமை உரையில் டியூடிஏஎஸ்ஸின் அடுத்த வெற்றி திட்டமான "மில்லியன்ஸ்" ( துபாயில் 1 கேட்டரிங் யூனிட் 10 மினி ரெஸ்டாரென்ட் ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதற்கான திட்ட வரைவு விரைவில் வெளியிட உள்ளதாகவும் உலக தமிழர்களை தொழிற் ரீதியாக ஒருங்கிணைக்க துபாய் தமிழர் சங்கமம் மேற்கொள்ளும் இந்த அறிய முயற்சிக்கு தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் திரு. ராஜ்குமார் அவர்கள் நன்றி கூறினார். தமிழகத்திலிருந்து துபாய் வந்து வேலை தேடும் தமிழ் சகோதரர்கள் குறைந்த செலவில் இந்த வில்லாவை தங்கிக் கொள்ள பயன்படுத்தலாம்.






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment