கடையநல்லூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 44). இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு கருப்பசாமி அவரது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்மகும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில் கருப்பசாமி காலையில் எழுந்த பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆளில்லாத வீடுகளில் கொள்ளை, கடைகளில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment