கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மணிமேகலை (வயது26). இவர்களுக்கு 3 வயதில் பிரியா என்ற குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டுக்கு அருகே கட்டிட தொழிலாளி கிருஷ்ணசாமி (26) என்பவர் வசித்து வந்தார்.

சுரேஷ் கூலி வேலைக்கு வெளியில் சென்ற போது, கிருஷ்ணசாமி அடிக்கடி மணிமேகலை வீட்டுக்கு சென்று பேசுவார். அப்போது அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சுரேஷ்கும் அவரது உறவினர்களும் கள்ளக்காதலர்களை சத்தம் போட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணசாமி, மணிமேகலையையும், அவரது மகள் பிரியாவையும் வெளியூருக்கு கடத்தி சென்று விட்டர். 

இதுகுறித்து சுரேஷ், கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலியையும் அவரது குழந்தையையும் கடத்தி சென்ற கிருஷ்ணசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment