கடையநல்லூர் கருப்பாநதிஅணை அருகே பெரியாற்று படுகையில் பெரியநாயகம் கோவில் உள்ளது. இக்கோவிலில் மதியம் வரை பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விடுவார். அதன்படி நேற்று முன்தினம் மதியம் பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலை கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கோவிலை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்தது. 

இது குறித்து பூசாரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஆனால் கொள்ளை நடந்தது தொடர்பாக இன்னும் போலீசில் புகார் செய்யப்படவில்லை. கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment