கனடா மற்றும் அமெரிக்கா ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலை இந்த வார இறுதி வரை தொடரும் என எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்றும், நாளையும் வெப்பநிலை அமெரிக்காவில் அதிகரிக்கவுள்ளதுடன், வேகமான குளிர்காற்று மந்தமாகவுள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றூம் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் 50 மாநிலங்களும் கடும் குளிரால் உறைந்து போயிருந்தன. உதாரணமாக நியூயோர்க்கின் வெப்பநிலை 5F ஆக இருந்தது. 1896ம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறான நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. அண்டார்டிக்காவில் நிலவும் குளிரை விட கடும் குளிர் அமெரிக்காவை ஆக்கிரமித்திருந்தது.
பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் என பெரும்பாலானவை மூடப்பட்டன. சராசரி வெப்பநிலை -51 எனும் நிலைக்கு கூட சில மாநிலங்களில் சென்றிருந்தது. இக்கடும் குளிரில் கொதிக்கும் சுடுநீரை வானத்தில் உயர்த்தி வீசினால் உடனடியாக அவை பனியில் உறைந்து பனித்துகள்களாக மாற்றமடையும் அளவுக்கு கடும் குளிர் அங்கு நிலவிவருகிறது. இதற்கு சான்றாக வெளியிடப்பட்ட வீடியோவும் படு பிரபலமடைந்துள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment