புளியங்குடி, :புளியங்குடி நீர்பாய்ச்சி மாடத்தெரு வை சேர்ந்தவர் குருசாமி மனைவி சுதா(28). இவர்களுக்கு சத்யா(9), சந்தியா(6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குருசாமி திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக பேச்சு வார்த்தை கிடையாது.

இதனால் சுதா குழந்தைகளுடன் தனது தாய் முனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி சுதா, திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். அவர் இதுவரை ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து முனியம்மாள் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 குழந்தைகளின் தாய் திடீரென மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment