கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கொட்டாரத்தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 30). இவரது மனைவி அழகுதுரைச்சி (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது.
இந்நிலையில் அழகுதுரைச்சி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கணேஷ்குமாரிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அழகுதுரைச்சி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று கணேஷ்குமார், அவரது சகோதரி சுப்புலட்சுமி, தாய் முருகாத்தாள் ஆகியோர் அழகுதுரைச்சி வீட்டிற்கு சென்று அவரை தட்டிக்கேட்டனர். அப்போது ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து அழகுதுரைச்சியையும், அவரதுதாய் வெள்ளதாயையும் சரமாரி தாக்கினர்.
காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment