உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் சாலைகளில் செல்லக்கூடியவர்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு ஆங்காங்கே அப்படியே தொழுது கொள்வார்கள்.
அதேப்போல் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் சாலையின் ஓரங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் தொழுவதை காண முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரூந்தில் பயணம் செய்யும் போது அருகாமையில் அமர்ந்திருக்கும் இந்து சகோதரர் கோவிலை கண்டு விட்டால் தம்முடைய கைகளால் முகத்தில் முத்தமிட்டு கொள்வார். அருகாமையில் அமர்ந்திருக்கும் கிறித்தவ சகோதரர் பைபிள் படித்து வருவார்.
அவரவர் தம்முடைய மத அடையாளத்தை எப்பொழுதும் காட்டிக் கொள்ளும் சூழ்நிலையில் முஸ்லிம்களோ தம்முடைய அடையாளத்தை காட்டிக் கொள்வதற்கு கூட தயங்குவார்கள்.
பேரூந்தில் பயணம் செய்யும் முஸ்லிம்கள் குர்ஆன் படிப்பதை கூட தயக்கமாக கருதுவார்கள்.
திருக்குர்ஆன் என்பது தீவிரவாதத்தை போதிக்கும் புத்தகமா ?
திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல உலக மக்களுக்கே பொதுமறையாக இறக்கப்பட்ட நல்லுபதேசம் மட்டுமே...
அதை படிப்பதற்கு கூட தயங்கிய சகோதரர்களுக்கு மத்தியில் இறைவனின் அருளால் இப்பொழுது பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு தம்மை முஸ்லிமாக காட்டிக் கொள்வதில் பெருமை படுவதை காண முடிகிறது.
பேரூந்தில் பயணம் செய்யும் முஸ்லிம் சகோதரர்கள் திருக்குர்ஆன் படிப்பதும் அதை அருகாமையில் அமர்ந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கு கொடுத்து படிக்க சொல்வதையும் காண முடிகிறது.
மாற்றத்தை நோக்கி தமிழக முஸ்லிம்களின் பயணம் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment