மும்பை : பிகே படம் வசூலில் சாதனைகளை குவிக்கும் அதே நேரம் சர்சைகளுக்கும் குறைவில்லை. பிகே படம் குறித்து கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கு அப்படத்தின் கதாநாயகன் அமீர்கான் அளித்த பதில் பின் வருமாறு:

செய்தியாளர் : படத்தில் கோயிலில் இருந்து பணம் திருடுவதாக காட்டும் நீங்கள் ஏன் தர்காவில் இருந்து சால்வை திருடுவதாக காட்டவில்லை ?

அமீர்கான் : மக்கள் இவ்வுலகில் வாழ பணமே பிரதானம், சால்வை அல்ல.

செய்தியாளர் : இப்படத்தில் ஒரு காட்சியில் கடவுள் சிவனை அவமானப்படுத்தியிருப்பீர்கள். ஏன் இஸ்லாத்தை சார்ந்த முஹம்மது நபி அல்லது ஹுசைன் குறித்து அவ்வாறு காட்சி வைக்கவில்லை.

அமீர்கான் : முதலில் இப்படத்தில் எக்கடவுளையும் இழிவுபடுத்தவில்லை. இரண்டாவது முஸ்லீம்கள் முஹமது நபி அல்லது ஹுசைனின் புகைப்படம் வைத்திருப்பதில்லை. எனவே நாம் நினைத்தாலும் அவர்களை இழிவுபடுத்த முடியாது.

செய்தியாளர் : ஹிந்து கடவுளர்கள் மற்றும் ஹிந்து பெண் கடவுளர்களின் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனம் செய்த நீங்கள் ஏன் முஸ்லீம்களின் கடவுளை குறித்து எவ்வித விமர்சனமும் செய்யவில்லை

அமீர்கான் : மேலுள்ள கேள்விக்கான அதே பதிலே இதற்கும் பொருந்தும். அல்லாஹ்வை குறித்து எவ்வித உருவக விமர்சனமும் செய்ய முடியாது, ஏனெனில் இஸ்லாம் அல்லாஹ்வை குறிக்க எவ்வுருவத்தையும் புகைப்படத்தையும் பயன்படுத்துவதில்லை.

செய்தியாளர் : இப்படத்தில் ஹிந்து பெண்ணை முஸ்லீம் ஆண் காதலிப்பதாக காட்டியுள்ளீர்கள். முஸ்லீம்கள் அல்லது பாகிஸ்தான் ஆண்களை நல்லவர்களை போல் படத்தில் காட்டியுள்ளீர்கள். அக்காதல் கதை லவ் ஜிஹாதை ஊக்குவிப்பது போல் தோன்றவில்லையா

அமீர்கான் : முஸ்லீம்களும் பாகிஸ்தானியர்களும் நாம் நினைப்பது போல் மோசமானவர்கள் அல்ல என்று தான் இப்படம் சித்தரிக்கிறது. இதற்கு முன் வெளியான படங்களில் முஸ்லீம் பெண்ணை ஹிந்து ஆண் காதலிப்பது போல் காட்சிகள் வெளியான போது எப்படி நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையோ அது போல் இப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.

செய்தியாளர் : படம் நெடுக ஒரு ஹிந்து சாமியாரை துரத்தி செல்கிறீர்கள். ஏன் ஒரு முஸ்லீம் மதகுருவை அவ்வாறு துரத்தவில்லை ?

அமீர்கான் : இஸ்லாமிய சமூகத்தில் உள்ள எந்த மதகுருவும் தம்மை இறைவனின் தூதர் என்றோ இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்வதாகவும் யாரும் கூறி கொள்வதில்லை. எவ்வளவு மிகப் பெரும் மதகுருவாக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து கற்றதையே சொல்வதாக கூறுகிறாரே தவிர இறைவனோடு நேரடி தொடர்பு உண்டு என்றெல்லாம் சொல்வதில்லை.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment