கடையநல்லூர் அருகே உள்ள துரைசாமியாபுரத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிதண்ணீர் வினியோகம் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் இடைகால் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தென்காசி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment