நெல்லை மாவட்டத்தில் மழை: கடையநல்லூரில் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்தகால நிலை நிலவுகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளன. குளங்களில் நீர் நிரம்ப தொடங்கி உள்ளது.

கடையநல்லூர் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள ஸ்ரீவல்லவன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி அங்குள்ள மதினாநகருக்குள் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதியில் இருந்த 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடையநல்லூர் தாசில்தார் நாகராஜன் தலைமையில் அதிகாரிகள் விரைந்துசென்று வெள்ளத்தை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment