நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38), லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (30). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வருவார். இதற்கு கற்பகவல்லி எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்வார்.

சமீபத்தில் தனக்கு கடன் அதிகமாக உள்ளதால் வீட்டை விற்கப்போவதாக கண்ணன் கூறியுள்ளார். இதற்கு கற்பகவல்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே நேற்று கடும் சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், மனைவி கற்பகவல்லி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடி விட்டார்.

இதில் உடல் கருகிய கற்பகவல்லியை அவரது தாயார் திருமலையம்மாள் மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கண்ணனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment