கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 13) நடைபெறும் வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலர் திருமலைக்குமாரசாமி, மாவட்டச் செயலர் ஆறுமுகச்சாமி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சேது.அரிகரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மறவர் மண்டபத்தில் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு எம்.எல்.ஏ., பா.ம.க. இணைப் பொதுச் செயலர் இசக்கி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக அன்று காலை தென்காசி ரயில் நிலையத்தில் வைத்து ராமதாஸþக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment