கிருஷ்ணாபுரம், மகாராஜா கணபதி நகரைச் சேர்ந்த கந்தப்பன் மகன் முத்துமாரியப்பன் (24) . இவரும் இவரது நண்பரான முருகேசன் மகன் சூரியவேலுவும் (24) வியாழக்கிழமை நள்ளிரவு கிருஷ்ணாபுரத்திலிருந்து, கடையநல்லூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனராம்.
அப்போது தென்காசியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி பைக் மீது மோதியதாம்.
இதில், முத்துமாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சூரியவேலு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து நயினாரகரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் திருமலைவேலுவை கைது செய்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment