கடையநல்லூர் பகுதியில் கடைகளில் பயன்படுத்திய 18 வீட்டு உபயோக சிலிண்டர்களை உணவு வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர் பகுதியில் உணவகங்கள் உள்ளிட்டவைகளில் வணிக சிலிண்டர்களுக்குப் பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தென்காசி உணவு வழங்கல் வட்டாட்சியருக்கு பாரத் கேஸ் விநியோகஸ்தர் புகார் செய்ததையடுத்து, உணவு வழங்கல் வட்டாட்சியர் திருமாமணி தலைமையில் உணவு வழங்கல் துறையினர் ஆறுமுகம், வள்ளிநாயகம், பாலமுருகன், இசக்கி, ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கடையநல்லூர் பகுதியில் சோதனை மேற் கொண்டனர். அப்போது கடைகளில் பயன்படுத்தப்பட்ட 18 வீட்டு உபயோக சிலிண்டர்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment