File Photo |
கடையநல்லூர் மதினாநகரை சேர்ந்தவர் செய்யதுமசூது. இவரது மகன் ஒசாமா மைதீன் (வயது 13). 7–ம்வகுப்பு படித்து வந்த இவன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். கிணற்றின் மேற்பகுதியில் இருந்து டைவ் அடித்த ஒசாமா மைதீன் தண்ணீருக்குள் மூழ்கி விட்டான்.
அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஒசாமாமைதீன் தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விட்டான்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாணவனின் உடல் மீட்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment