இக்பால் நகரில் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டு ஸ்கூல் போகும் பெண்களை கேலிசெய்வதும் பாலோ பண்ணுவதுமாய் இருந்தார்கள் இப்போது அவர்களை அங்கிருந்து அடித்து விரட்டிய பின்பு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கலுங்காத்தன் ரஹ்மதுல்லா.. இவர் அல்லிமூப்பன் தெருவில் கிழக்குப்பகுதியில் கனி டீ கடைக்கு பின்பு தனக்கு சொந்தமான இடத்தில் இவர்களுக்கு சங்கம் வைத்து கொடுத்தார் வட்டாரத்திலுள்ளவர்கள் எதிர்த்த போதிலும் இவர் அனுமதித்துள்ளார்...
இப்போ அங்கிருந்துதான் பிரச்சினை ஆரம்பம் இவர்கள் இந்த ஸ்கூல் டைம் மதரஸா டைம்ஸ்லாம் அல்லிமூப்பன் தெருவில் பைக்கில் இரண்டு இரண்டு பேராக மேற்க்கே போகிறார்கள்.. போகும்போதே ஸ்கூல் போகும் பிள்ளைகளிடம் ஜாடையாய் பேசுவது.. மேலும் அவர்கள் பக்கத்தில் பைக்கில் போவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் பின்பு நேராக அல்லிமூப்பன் தெருவில் மேற்கே கல்தைக்காவில் குழுமுகிறார்கள் அங்கெ காஜி ஸ்டோர் முன்பு மொத்தமாக நின்றுகொண்டு ஸ்கூல் போகும் பிள்ளைகளை பார்ப்பதும் சிரிப்பதும் போன்ற காரியங்களில் ஈடு படுகிறார்கள்..(இந்த சம்பவம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது சந்தேகம் உள்ளவர்கள் ஸ்கூலுக்கு போகும் நேரத்திலும் ஸ்கூல் முடியும் நேரத்திலும் கவனித்தால் இது நடப்பது நன்றாகவே உங்களுக்கு தெரியும்) நமது சமுதாய பிள்ளைகளை நமது சமுதாய பையன்களே இப்படி பின்தொடர்ந்தால் என்ன செய்வது இதை கண்டுக்காமல் விட்டுவிட்டால் படிக்கும் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போகதான் செய்யுங்கள்.
கல்தைக்காவில் அந்த நேரத்தில் கூடும் பையன்களை அந்த ஏறியாவில் உள்ளவர்கள் கண்டிக்க வேண்டும் அந்த பையன்களுக்கு சங்கம் அமைக்க இடம்கொடுத்த கலுங்காத்தன் ரஹ்மதுல்லா உடனடியாக அந்த பையன்களை காலி செய்ய வைக்க வேண்டும்.. இதை வட்டாரத்திலுள்ளவர்கள் வற்புறுத்த வேண்டும்.. தயவுசெய்து செய்து நமது சகோதரிகளை வழிகெடுத்து விடாதீர்கள்
கடையநல்லூர் வாசீ
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment