விளையாட்டுத் துறையில் படு பிரபலமாக இருக்கும் இருவரை எடுத்து தமது விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளும் உக்தியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது துருக்கி நாட்டு ஏர்லைன்ஸ் விமானம்.
பிரபல காற்பந்து வீரர் மெஸ்ஸி மற்றும் பிரபல கூடைப்பந்து வீரர் பிரையண்ட் ஆகியோர் இணைந்து கலக்கிய துருக்கிய விமான சேட்டை விளம்பரமும்,  செல்ஃபி விளம்பரமும்  மிகப்பிரபலமனது.

தற்போது அதே உக்தியை கையாண்டிருக்கிறது பிரபல ஜில்லெட் நிறுவனம். இதற்காக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை, மெஸ்ஸியுடன் இணைத்து இவ்விளம்பரத்தை தயாரித்திருக்கிறார்கள். இதில் தான் மெஸ்ஸி கிரிக்கெட் விளையாடுகிறார். அப்படி காண்பிப்பது கிராபிக்ஸில் தான் என்ற போதும் ரசிக்கும் வகையிலேயே இருக்கிறது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment