கடையநல்லூர் உள்ளிட்ட 5 இடங்களில் புதிதாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வாசித்த அவர், தொழில் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமது அரசு கடந்த ஆண்டில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்கியதாகத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில், திருச்சி மாவட்டம் மணிகண்டம், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம், நெல்லை மாவட்டம் கடையநல்லூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில், 40 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என முதலமைச்சர் கூறினார். நாமக்கல் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல் கூடங்குளம் உள்ளிட்ட 6 இடங்களில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment